திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மணலி புதுநகர் 15வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் நந்தினி சண்முகம் மீஞ்சூர் கிழக்கு வட்டார தலைவர் ஆத்திப்பட்டு புருஷோத்தமன் 15 வது வார்டு வட்டத் தலைவர் காமேஷ் மாவட்ட செயலாளர் கிருபாகரன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு