திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே காணியம்பாக்கம் சேர்ந்த 12ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி தர்ஷினி கடந்த சில ஆண்டுகளாக சிலம்ப பயிற்சி பெற்று வருகிறார். பள்ளி, வட்டம், மாவட்டம், மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்ற தர்ஷினி தங்க பதக்கம் வென்று கேரளாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்க அரசு பள்ளி மனைவி தேர்வானது குறித்து தகவலறிந்த பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை. சந்திரசேகர் தர்ஷினியை நேரில் சந்தித்து ரூ.25000 நிதி உதவி வழங்கி பாராட்டு தெரிவித்தார். கேரளா சென்று போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி தருமாறு மாணவியை எம்எல்ஏ வாழ்த்தினார். உடன் மீஞ்சூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மொழிப்போர் தியாகி டாக்டர் கா.சு. ஜெகதீசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு