செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்து முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமிழகத்தில் இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி முக்கிய பண்டிகை ஆகும். கடவுள்களில் முழு முதல் கடவுளாக வழிபடக்கூடிய கடவுளாக விநாயகர் பெருமான் திகழ்கிறார். இவ்விழாவானது ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாக விநாயகப் பெருமான் முழு முதல் கடவுளாக பிறந்ததை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் பல பகுதிகளை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலைகள் உரிய துறைகளிடம் அனுமதி பெற்ற இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அருகில் உள்ள நீர் நிலைகள் கரைப்பது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டில் விநாயகர் ஊர்வலம் எட்டாம் தேதி மற்றும் 15ந் தேதி வெகு விமர்சையாக நடைபெறுவதை இந்து முன்னணி சார்பில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் மற்றும் ஊர்வலத்தில் பெண்கள் கலந்து கொள்ள இருப்பதால் பெண்களுக்கு ரெடிமேட் கழிப்பறை வசதி செய்து கொடுக்கும்படி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் கோரிக்கை மனுவை இந்து முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனுவை அளித்தனர். மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளை பரிசளிப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் பிகே.அன்னை ராஜு மாவட்ட பொதுச்செயலாளர் என். மணிகண்டன் காஞ்சி கோட்டை செயலாளர் ஆறுமுகம் இந்து ஆட்டோ முன்னணி மாநில செயலாளர் அனைவரும் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்