செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலை ஒட்டி அமைந்துள்ளது பெருந்தண்டலம் ஊராட்சியாகும் . இந்த ஊராட்சியில் அனுமந்தபுரம் செல்லும் சாலையை ஒட்டி பெருந்தண்டலம் பெரிய ஏரிஉள்ளது. இந்நிலையில் ஏரியில் மாடு மேய்க்க சென்ற முதியவர் ஒருவர் கட்டைப்பையில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்தார். அப்பொழுது பிறந்து மூன்று மணி நேரமே ஆனநிலையில் தொப்புள் கொடிக் கூட அறுக்கப்படாத ஆண் குழந்தை ஒன்று ரத்தத்துடன் அழுதபடி இருந்தது. உடனடியாக அவர் அருகில் உள்ள இளைஞர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் ஊராட்சி மன்ற தலைவரான மேரிதமிழ்ராணி செல்வத்துக்கு விஷயத்தை கூறினார்கள். உடனடியாக விரைந்து வந்த தலைவர் மேரிதமிழ் ராணிசெல்வம் குழந்தையை கட்டைப்பையில் இருந்து மிகவும் பத்திரமாக எடுத்து குழந்தையை தனது மடிமீதுவைத்து முதலாவதாக குழந்தை மீது இருந்த முட்களை அகற்றினார் .பின்பு குழந்தை
மீது இருந்த ரத்தத்தை கரைகளை துடைத்து எடுத்தார்.
அதேபோல் குழந்தை மீது குத்தப்பட்டிருந்த சிறு சிறு முட்களையும் ஒவ்வொன்றாக அகற்றினார். பின்பு குழந்தையின் அழுகை அதிகமாகவே குழந்தைக்கு பால் கொடுக்க ஏற்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலையத்திற்கும் , செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அடுத்த கட்டமாக ஆம்புலன்ஸில் விருந்து வந்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் தலைவர் மேரி தமிழ் ராணி செல்வத்திடம் இருந்த குழந்தையை பார்த்தனர்கள். அப்பொழுது குழந்தை நல்ல நிலையில் இருந்ததைக் கண்டு குழந்தையை எப்படி இவ்வளவு சாதுரியமாக எப்படி பாதுகாத்தீர்கள். அதேபோல் முதலுதவி எப்படி இவ்வளவு தெளிவாக செய்தீர்கள் எனக் கேட்டனர்கள் அதற்கு அவர் தான் பிஎஸ்சி நர்சிங் படித்திருப்பதாகவும் நர்சிங் தொழிலில் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார். குழந்தையை துரிதமாகவும் சமயோஜனமாகவும் முதலுதவி செய்ததின் அடிப்படையில் குழந்தைக்கு உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என ஆம்புலன்சில் வந்த அரசுமருத்துவ மனை செவிலியர் தெரிவித்தார்.
இதற்குள் ஏரியில் பச்சிளம் குழந்தை இருப்பதாக ஊர் மக்களிடையே தகவல் பரவியது இதனை தொடர்ந்து ஏரியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்கள். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இறுதியாக குழந்தை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு
பொது அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது. ஏரியில் குழந்தை முட்புதரில் வீசப்பட்ட தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்து குழந்தையை மீட்டு குழந்தைக்கு தேவையான அனைத்து முதலுதவிகளையும் உடனடியாகவும் , துரிதமாகவும், பாதுகாப்பாகவும் செய்ததால் தான் குழந்தை உயிர் பிழைத்தது என பொதுமக்கள் கூறி தலைவர் தமிழ்தானி மேரி செல்வத்தை வெகுவாக பாராட்டினார்கள் இச்சம்பவத்தினால் சுமார் மூன்றரை மணி நேரம் பெருந்தண்டலம் ஏரிக்கரை பரபரப்பாக காணப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்