மதுரை: மதுரை அழகர் கோயில் நியாயவிலைக் கடை பொதுமக்களின் பயன்பாடு இன்றி அடிக்கடி பூட்டிஉள்ளது. மதுரை அருகே அழகர் கோவில் ரோட்டில் உள்ள இரணியம் ஊராட்சியில் உள்ள நியாயவிலை கடை அடிக்கடி பூட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கே பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர்.
ஏதாவது ஒரு நாள் கடை திறக்கும் பொழுது பொது மக்களுக்கு குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் புகார். மேலும் இது தொடர்பாக இனிவரும் காலங்களில் தினமும் நியாய விலை கடையை திறந்து பொதுமக்களுக்கு அரசு தரும் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது