திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பொதியாரன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவானது இன்று நடைபெற்றது. நான்கு கால யாக கலச பூஜையுகளுன் கலசநீர் மேல தாளங்கள் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு
ராஜ கோபுர கலசங்களுக்கும் பொன்னி அம்மனுக்கும் கும்பாபிஷேகமானது நடத்தப்பட்டு பின்னர் கலச நீர் ஆனது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஆரம்பாக்கம் பழவேற்காடு பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொன்னி அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ரெட்டிபாளையம் பூங்குளம் பொதியாரான்குளம் உள்ளிட்ட நான்கு ஊர் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்று கும்பாபிசேக விழாவை சிறப்பித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு