சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதி புதூர் ஸ்ரீ ராஜராஜன் கல்விக் குழுமம் சார்பாக ஆசிரியர் தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது . இந்த நிகழ்விற்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் ஸ்ரீ ராஜராஜன் கல்விக் குழுமத்தின் ஆலோசகருமான முனைவர்.S.சுப்பையா தலைமையேற்று உரையாற்றும்போது அவரது உரையில் ஒரு ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு எளிதாக புரிகின்ற வகையில் பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் . ஒரு சிறந்த ஆசிரியர் என்றால் கோபம் மற்றும் அகங்காரம் இருக்கக் கூடாது. தவறு செய்தால் மாணவர்களை மன்னிக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் . கற்பிக்கப் போகும் பாடத்தை நன்கு தயார் செய்து வகுப்பிற்குச் செல்ல வேண்டும் எனவும் கூறினார் .சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் மேனாள் துணைவேந்தர் முனைவர். எஸ். தங்கச்சாமி அவர்கள் பேசுகையில் மாணவர்களை ஈர்க்கின்ற வகையில் ஆசிரியர்கள் பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களோடு. ஆசிரியர்கள் சக பயணியாக பயணிக்க வேண்டும் . அப்போது தான் ஒரு சிறந்த மாணவரை உருவாக்க முடியும். என்றும் அவர் கூறினார் .
இந்த நிகழ்ச்சியில் முன்னதாக பொறியியல் கல்லூரி டீன். முனைவர் .எம். சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் . இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக பிரமுகர்களாக மருத்துவ அதிகாரி திரு.ராஜரத்தினம், கலிபோர்னியாவில் இருந்தும். திருமதி. மாலாகோபால் , இயக்குனர் , குறள் கூடல் பவுன்டேசன், அமெரிக்காவில் இருந்தும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் புதிதாக பணியில் சேர்ந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக
நாசா சென்று வந்த சிபிஎஸ்இ பள்ளி மாணவி மெய்யமைக்கு நாசா சென்று பயிற்சி பெற்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர்கள். திரு .வெங்கட்ரமணன். திருமதி. வடிவாம்பாள். கல்வியியல் கல்லூரி முதல்வர் . சிவக்குமார், திருமதி .அங்கயற்கன்னி. கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் .பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் ,பள்ளி ஆசிரியர்கள் .ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக பள்ளி முதல்வர். திரு . வெங்கட்ரமணன் அவர்கள் நன்றி கூறினார். ஆசிரியர் தின விழாவிற்கான ஏற்பாட்டை பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் திரு . மகாலிங்க சுரேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி