செங்கல்பட்டு தசரா திருவிழா தொடங்க உள்ள நிலையில் தசரா சாலையில் சுமார் 33 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்றையை திறந்திட கோரி சிபிஐஎம் கட்சி நகராட்சி அதிகாரியிடம் மனு செங்கல்பட்டு நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா பண்டிகைக்கு மாவட்டம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இதை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் நகராட்சிக்கு வரும் வருமானத்தை விட தனியாருக்கு பல லட்சங்கள் வருமானம் செல்கிறது. வருகை தரும் பொது மக்களுக்கு குடிதண்ணீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இந்த தசரா சாலையில் உள்ள தொடக்கப்பள்ளி எதிரில் உள்ள இடத்தில் சுமார் 33 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பொதுக்கழிப்பிடம் இன்னும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. ஜல்லி மண்ணு, மணல் செங்கல் போன்ற கட்டுமான பொருட்களை கொட்டி விற்கும் இடமாகவும் மாறி வருகிறது.
செங்கல்பட்டு நகரத்தின் சிறப்பு தசரா என்ற அடிப்படையில் அறிஞர் அண்ணா ஆண்கள் பள்ளி முதல் பி.எஸ்.என்.எல்அலுவலகம் வரை உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு உள்ளது போல் பேவர் பிளாக் அமைத்து சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்து தர வேண்டுகிறோம்.
மேலும் தசரா விழாவில் விற்பனையாகும் தின்பண்டங்கள் சுகாதாரமாக உள்ளதா என்பதை தினமும் ஆய்வு செய்ய வேண்டும். என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட்)சார்பாக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர். V.அரிகிருஷ்ணன், பகுதி குழு உறுப்பினர்கள். N.அன்பு, மு.முனிச்செல்வம், குண்டூர் கிளைச் செயலாளர்.T.சாம்சன் ஆகியோர் செங்கல்பட்டு நகராட்சி அதிகாரி இடத்தில் வழங்கினார்கள். இதில் சிபிஐஎம் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்ட மனுவை பெற்றுக்கொண்டு நகராட்சி அதிகாரி அவர்கள் ஆணையர் வந்தவுடன் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றேன் என்று கூறினார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்