சிவகங்கை: (02.10.2024) காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி (02.10.2024) காந்தி ஜெயந்தி அன்று காலை 11.00 மணியளவில் அரசாணை (நிலை) எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள்: (25.09.2006)-ல் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
அன்றைய கிராம சபைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் (02.10.2024) காந்தி ஜெயந்தி அன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு அவ்வூராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை 2023-24, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி, தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரக) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை, உறுதி திட்டம் மற்றும் ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்படவுள்ளது. எனவே. (02.10.2024) காந்தி ஜெயந்தி அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி