தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய உத்தரவின்பேரில், பருவ மழை முன்னெச்சரிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்றைய தினம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மழை அளவீட்டுக்கான நவீன கருவிகள் – ஏற்பாடுகள், மழை குறித்தத் தகவல்களை உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிப்பதற்கான கட்டுப்பாட்டு அறை – தமிழ்நாடெங்கும் மழைப்பொழிவினை கண்காணிப்பதற்கான நவீன வழிமுறைகள் போன்றவற்றை பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், விழிப்புடன் செயல்பட்டு, மழைக்காலத்தில் உயிரிழப்பு – உடைமை இழப்பு போன்ற அசம்பாவிதங்களை தவிர்ப்போம் என்று ஆலோசனைகளை வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி