திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்டம் ஆரணி , கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய பேரூராட்சிகளில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் ஸ்டாலினின் திமுக அரசால் 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்காகவும் ஆண்டுக்கு ஒரு முறை 6 சதவீதம் சொத்து வரியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வேண்டி வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து பதாக்களை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் STD ரவி மீஞ்சூர் நகர செயலாளர் பட்டாபிராமன் ஆரணி நகர செயலாளர் தயாளன் ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே. எம். எஸ் சிவக்குமார் அம்மா பேரவை இணைச் செயலாளர் கடப்பாக்கம் ராஜா ஏலாவூர் முல்லைவேந்தன் மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் என பெருந்திரளாக கலந்து கொண்டு ஸ்டாலின் ஆட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு