திண்டுக்கல்: அதிமுக துணை பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், நத்தம் இரா.விசுவநாதன் ,திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, நிலக்கோட்டை ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகளுக்கு, கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நம்முடைய பகுதிகளில் ஆற்ற வேண்டிய மக்கள் பணிகள் குறித்தும், கழக உறுப்பினர்கள் பங்கேற்கும், செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கினார். இந்தக் கூட்டத்தில், நிலக்கோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி எஸ். தேன்மொழி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் யாகப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பேருர் கழக செயலாளர்கள் சேகர், தண்டபாணி, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் பாலசுப்ரமணியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி