மதுரை : மதுரை மாவட்டம் பாலமேட்டில், திமுக மாவட்ட அவைத் தலைவர் பாலமேடு பால
சுப்ரமணியன் அவர்களின் புதிய நிறுவனமான, எஸ்.எஸ்.டிரேடர்ஸ் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். எஸ்.எஸ்.டிரேடர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் முரளிதரன், சரவணன் ஆகியோர் வரவேற்றனர். இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்
குழு உறுப்பினர் முத்தையன், நகரச் செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவி சுமதி பாண்டியராஜன், ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், ஆதிதிராவிடர் நல குழுத்தலைவர் கிருஷ்ண
மூர்த்தி, பேரூர் இளைஞரணி பிரபு, மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி