முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் பேசிய முதல்வர்; “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போற்றக் கூடிய பல திட்டங்களை செய்துள்ளோம். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி