சிவகங்கை: 21-வது கால்நடைக் கணக்கெடுப்புப்பணி மாவட்டம் முழுவதும்(28.02.2025) வரை நடைபெறவுள்ளதால், துல்லிய கணக்கெடுப்பு பணிக்கு, கால்நடை வளர்ப்போர் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் -மாவட்ட ஆட்சித்தலைவர் த ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. இதுவரை 20வது கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. (25.10.2024) முதல் (28.02.2025) வரை 21வது கால்நடை கணக்கெடுப்பு நாடு முழுவதும் துவங்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கும் இப்பணி கால்நடை பராமரிப்புத்துறையினரால் விரைவில் தொடங்குகிறது. இந்தப்பணியினை, மேற்கொள்ள சிவகங்கை மாவட்டத்தில் 158 எண்ணிக்கை கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 33 எண்ணிக்கை மேற்பார்வையாளர்களுக்கு நேர்முகப்பயிற்சி மற்றும் களப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் கிராம வாரியாகவும், நகரப்பகுதியில் வார்டு வாரியாகவும் நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பின் மூலம் கிராமம் மற்றும் நகரப்பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும்16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை இனம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். கால்நடைகளின் எண்ணிக்கையை துல்லியமாககணக்கு எடுத்தால் தான், கால்நடை பராமரிப்பிற்கான எதிர்கால திட்டங்களை தீட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவை சிறப்பாக செய்ய இயலும். கால்நடைகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தீவனம் கால்நடை நோய் தடுப்பூசி கால்நடை மருந்துகள் உற்பத்தி போன்றவற்றை தட்டுப்பாடு இல்லாமல் தயாரிக்க கால்நடை எண்ணிக்கை முக்கியம். வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கால்நடைகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களான பால். பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், வெண்ணை, நெய், ஆட்டி இறைச்சி, பிற இறைச்சி முட்டை போன்றவற்றை தட்டுபாடின்றி உற்பத்தி செய்ய கால்நடை கணக்கெடுப்பு மிகமிக முக்கியமானதாகும்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி