மதுரை: மதுரை, வாடிப்பட்டி அருகே , கச்சை கட்டியில் வாக்காளர் சிறப்பு முகாமை, முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் ஆய்வு செய்தார் . தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறும் நிலையில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே
கச்சை கட்டியில், நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை, முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு. காளிதாஸ், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா , பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு.கா. மணிமாறன், கோட்டைமேடு பாலா, ஊராட்சி மன்றத் தலைவர் ஆலயமணி, கச்சைகட்டி ரவி ,
குழந்தை வேலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி