கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் ஊராட்சி மன்ற கவுன்சில் கூட்டம் அதன் தலைவர் பிரியதர்ஷினி ஐயப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்கு முன் பதவியில் இருந்த தேவி மாங்குடி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று கூறிய மதுரை உயர்நீதிமன்ற கிளை பிரியதர்ஷினி ஐயப்பன் தலைவராக பொறுப்பேற்க உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் பிரியதர்ஷினி ஐயப்பன் பதவி ஏற்று கொண்டார். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததை தொடர்ந்து, இன்றைய தினம் காலை 11 மணியளவில் பிரியதர்ஷினி ஐயப்பன் தலைமையிலான முதல் கூட்டம் நடைபெற்றது.
இதில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகளாக, முன்னாள் எம்எல்ஏ கோட்டையூர் என்.சுந்தரம், கிட் அண்ட் கீம் கல்லூரி சேர்மன் ஐயப்பன், பத்திரிகையாளர்கள்,
கலந்து கொண்டனர். நான்கரை ஆண்டுகள் செய்ய தவறிய பணிகளை நான்கே வாரத்தில் செய்து முடிப்பேன் என்று சவாலோடு பொறுப்பேற்றுக் கொண்டவர் பிரியதர்ஷினி ஐயப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி