திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள ராமா ரெட்டி பாளையத்தில் இயங்கி வரும் மீஞ்சூர் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ 28 லட்சத்தில் NCTPP (Stage-3) நிறுவனத்தின் CSR நிதியில் கட்டப்பட்ட புதிய இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிதத்தை MLA துரை சந்திரசேகர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். விழாவில் MLA துரை சந்திரசேகர் பேசுகையில், இந்த தொடக்கப் பள்ளிக்கூடம் பொன்னேரி கல்வி வட்டாரத்தில் முதன்மையாக உள்ளதையும் மற்றும் சிறப்பாக செயல்படுவதையும் குறிப்பிட்டார். மேலும் பள்ளிக்கூடத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தலைமையாசிரியை மாலினி அவர்களையும் வெகுவாக பாராட்டினார்.
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவினை மாணவர்களே முழுவதுமாக தொகுத்து வழங்கியது விருந்தினர் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தங்கள் பள்ளியில் கூடுதலாக இன்னும் இரண்டு வகுப்பறைகள், சமையல் கூடம் மற்றும் கீழ்நிலை குடிநீர் தொட்டி வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழுவின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ரவி, பேரூராட்சி தலைவி ருக்மணி மோகன்ராஜ், பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர், மீஞ்சூர் திமுக நகர செயலாளர் தமிழ் உதயன், வார்டு உறுப்பினர்கள் கவிதா சங்கர், சங்கீதா சேகர், அபூபக்கர், நக்கீரன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் உமாசங்கர், டி.வி.எஸ். பள்ளி தலைமையாசிரியர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சையது அ