மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில்,இந்திய அரசமைப்பு உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.இந்திய அரசமைப்பு உறுதிமொழி இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச் சமுதாயமும், சமயச் சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்பு நலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும், தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில் 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.
என மாண்புமிகு மேயர் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதே போல், அந்தந்த மண்டல அலுவலங்களில் மண்டல உதவி ஆணையாளாகள் முன்னிலையில் அனைத்து பணியாளர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில்,துணை மேயர் தி.நாகராஜன், உதவி ஆணையாளர் (பணி) அருணாச்சலம், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் பாலாஜி, கண்காணிப்பாளர் ஜார்ஜ் ஆலிவர் லாரன்ஸ், உதவிப்பொறியாளர் பொன் மணி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி