மதுரை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47- வது பிறந்த நாளை முன்னிட்டு, அலங்கா நல்லூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், அலங்காநல்லூர் நகர் திமுக சார்பாக அங்குள்ள முனியாண்டி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, சமுதாய கூடத்தில்பொது மக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன்நகர் செயலாளர் ரகுபதி பேரூராட்சித் தலைவர் ரேணுகா கேஸ்வரி, கோவிந்தராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி துணைத் தலைவர் சாமிநாதன், யூனியன் துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், டாக்டர் கோகுல் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன் , அருண்குமார் , சுந்தர் சந்தனக்கருப்பு, பிரதாப், யோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி