மதுரை: ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டலம் 1 (கிழக்கு) அலுவலக கட்டிடத்தை,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சி பரசுராம்பட்டியில் ,புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டலம் 1 (கிழக்கு) அலுவலக கட்டிடத்தை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில், மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகம் ஆனையூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் மதுரை மாநகரின் மையப்பகுதியில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு (27.08.2023) அன்று மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.11 அழகர்கோவில் மெயின் ரோடு சர்வேயர் காலனி சம்பக்குளம் ரவுண்டானர அருகில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிடம் மொத்தம் 14654 சதுரடியில் கட்டப்பட்டு உள்ளது. இக்கட்டிடம் மொத்தம் தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளம் ஆகிய மூன்று தளங்களாக அமைக்கப்பட்டு உள்ளது. தரைத்தளத்தில் பதிவு வைப்பறை, சர்வேயர் அறை, கண்காணிப்பாளர் மற்றும் எழுத்தர்கள் அறை, சுகாதார அலுவலர் அறை, தேர்தல் அறை, உதவி செயற் பொறியாளர்கள் அறை, கருவூலம் அறை, வரவேற்பு அறை, பொது அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகளும், முதல் தளத்தில் மண்டலத் தலைவர் அறை, கருத்தரங்கு கூட்ட அறை, தணிக்கை அறை, உதவிப்பொறியாளர்கள் அறை, கணினி அறை, நிர்வாக அலுவலர் அறை, காத்திருப்போர் அறை, பொது அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகளும், இரண்டாம் தளத்தில் லிப்ட் மற்றும் தலைமை அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் இக்கட்டிடத்தில், மின்வசதிகள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர்கள், பேவர் பிளாக் சாலை வசதிகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள கிழக்கு மண்டல அலுவலக கட்டிடத்தை ,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், இன்று (29.11.2024) பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, சுவிதா, கண்காணிப்புபொறியாளர்முகம்மது சபியுல்லா,உதவி ஆணையாளர் பார்த்தசாரதி, நகர்நல அலுவலர் மரு.இந்திரா, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர். காமராஜ், திருமயிலேறி நாதன், உதவிப்பொறியாளர்கள் முருகன், சோலைமலை, பாபு, மாமன்ற உறுப்பினர் செங்கிஸ்கான் மற்றும் கிழக்கு மண்டலம் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி