செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்பட்டது. அதன் காரணமாக சதுரங்கப்பட்டினம் கிராமம் முழுவதுமே குப்பை கூலமாக தென்பட்டது. ஃபெஞ்சல் புயலைத் தொடர்ந்து நாளை பள்ளி திறப்பதால் பள்ளி வளாகத்தை ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்று சுத்தம் செய்து நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினி பவுடர் (பிளீச்சிங் பவுடர்) தெளித்து பள்ளி வளாகத்தை மாணவர்களின் வருகைக்காக தயார் செய்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்