செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த .ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள நீஞ்சல் மடுவில் மழையின் காரணமாக தரை பாலம் நிரம்பி வழிவதால் போக்குவரத்து தடைப்பட்டது. மற்றும் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால் தகவல் அறிந்த காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் . சந்தானம் அவர்கள் கொட்டும் மழை என்றும் பாராமல் நேரில் சென்று ஆய்வு செய்து விரைவில் மேம்பாலம் அமைத்திட அதிகாரியிடம் பேசுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். சந்தியாசெந்தில் ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர். மேலும் கிராம நிர்வாக அலுவலக கலையரசன், மற்றும் கட்சி நிர்வாகி கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்