காரைக்காலில் மண்டபத்தூர் முதல் வாஞ்சூர் வரை உள்ள 11 மீனவ கிராமங்களை சேர்ந்த சுய உதவி குழு, மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பஞ்சாயத்தார்கள் மற்றும் பெண்கள் உடன் பொருளாதார மேம்பாடு குறித்தான ஆலோசனை கூட்டம் மதகடி கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் (17.12.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முனைவர் து. மணிகண்டன், இஆப அவர்கள் தலைமை வகித்தார்கள். மேலும் நிகழ்ச்சியில் காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குனர் கோவிந்தசாமி, உதவி இயக்குனர் பாலாஜி, 11 கிராமம் மீனவ பெண்கள் மற்றும் பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் பெண்கள் மானிய விலையில் வலைகள் தருவதில் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் எனவும், மாநில விலையில் உயிர் காக்கும் கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பின்னர் கூட்டத்தில் ஆட்சியர் முனைவர் து. மணிகண்டன், இ.ஆ.ப அவர்கள் பேசியது காரைக்கால் மாவட்ட பெண்களை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதை மையமாகக் கொண்டுதான் கடந்த மாதம் மகளிர் மாநாடு மிக பிரம்மாண்டமாக மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மீனவ பெண்களை மையமாக வைத்து கடல் பாசி திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றானதும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான திட்டங்கள் ஒன்றாக கருதப்படும் கடல்பாசி திட்டத்தை காரைக்கால் மாவட்டம் மீனவ பெண்கள் அதிகளவில் பங்கேற்று, கடல்பாசி தொழிலை மேம்படுத்தி பொருளாதார ரீதியாக வெற்றி பெற வேண்டும்.
கடல் பாசி வளர்க்க இந்தியாவில் அந்தமான், தமிழக பகுதிகளில் பாம்பன் ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக புதுவை யூனியன் பிரதேசத்தில் காரைக்காலில் தான் கடல் பாசி வளர்ப்பதற்கு ஏதுவான சீதோசன நிலை நிலவுகிறது. கடலானது மீனவர்களின் சொத்தாக உள்ளதால் நீங்கள் தான் கடல்பாசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். கடல்பாசியானது மருந்துகள், அழகு கலை பொருள்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட அனைத்து விதமாக பொருட்கள் தயாரிக்க கடல்பாசி மூலப் பொருளாக இருப்பதால் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் கடும் வரவேற்பு உள்ளது. இதனால் மீனவ பெண்கள் கடல்பாசியை வளர்ப்பதன் மூலம் தனது பொருளாதாரம் மேம்பட உதவுகிறது. காரைக்கால் பகுதி மீனவ பெண்கள் கடல்பாசி திட்டத்தைத் எடுத்து கொண்டு தனியாக நிறுவனமாக செயல்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக வளர கடல்பாசி திட்டம் உதவும். குறைந்த அளவில் ரூ.50 ஆயிரம் அளவில் கிடைக்கும்.
ராமேஸ்வரம் பகுதி மீனவ பெண்களுடன் கலந்து கொண்டு கடல்பாசி வளர்ப்பு குறித்து பயிற்சியினை மேற்கொள்ளுங்கள். நீங்கள் கட்டும் வரிகள் தான் உங்களுக்கு திருப்பி அரசு நலதிட்டங்களாக தருகிறது. மீனவ பெண்கள் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு வர வேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து மீன்வளத்துறை மூலம் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யபடும். மத்திய மாநில அரசுகளின் மீனவ திட்டங்கள் குறித்து விரிவான தகவல்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். எம்பட திறன்கள் குறித்து மீனவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் மீன்வளத்துறை வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை மீனவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மானிய விலையில் வலைகள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி