செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சி நடைபெற்றது. இதன் துவக்க விழாவை செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி அவர்களும் மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் அங்கயர்கன்னி அவர்களும் இணைந்து கண்காட்சியை துவக்கி வைத்தார்கள். இந்த கண்காட்சியில் 700 மாணவர்கள் கலந்து கொண்டு உயர் கல்வி செல்வதற்கான முழு வழிகாட்டுதலையும் தெரிந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து துவக்க விழாவில் வரவேற்புரை ஆற்றினார். மற்றும் கண்காட்சியை காண மாணவர்களுடைய பெற்றோர்களும் வந்திருந்தனர். கண்காட்சி மாலை அளவில் நிறைவு பெற்றது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அன்பழகன்