மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தமிழ் கூடல் பயிற்சி கருத்தரங்கு நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு,தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். எழுத்தாளர் தங்கராஜ், உதவி தலைமை ஆசிரியர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் வரவேற்றார். ,இதில் முன்னாள் தமிழ் ஆசிரியர் புலவர் சங்கரலிங்கம் திருக்குறள் சிறப்பு பற்றி விளக்கி பேசினார். அப்போது அவ கூறியதாவது:- திருவள்ளுவர் கி.மு. 31 ஆண்டில் பிறந்து வாழ்ந்தவர். தமிழில் மென்மை அறிந்து ஒன்றே முக்கால் வரியில் நூல் ஒன்றை வடித்தார். அதை அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று அதிகாரங்களாக பிரித்து எழுத்தாணி கொண்டு1330 குறள்பாகள் படைத்து முக்கூடல் என்று பெயரிட்டார். அந்த நூலினை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அரங்கேற்றம் செய்தார்.
மனித வாழ்வில் வரைமுறை நெறிமுறை ஒழுக்க செயல்பாடுகள் பற்றி அதில் கூறியிருந்தார். உயிர் எழுத்தான ஆ வில் தொடங்கி மெய்யெழுத்தான ன் ணில் முடியும் படி எழுதப்பட்டுள்ளது என்று அதன் சிறப்புகளை விளக்கி பேசினார். இதில் தமிழ் ஆசிரியர்கள் நிர்மலா, கனிதா, ராணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி