விருதுநகர்: காரியாபட்டி ஒன்றியத்தில், காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், சீட்ஸ் நிறுவனம், மற்றும் மிஷன் சம்ரிதி நிறுவனத்துடன் இணைந்து காரியாபட்டி ஒன்றியத்தில் பருவகால நிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த 3 நாள் பயிற்சி பட்டறை முகாம் அருப்புக் கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் நடை பெற்றது. சீட்ஸ் நிறுவன இயக்குனர் பாண்டியன் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார். பயிற்சி கருத்தரங்கில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கேற்ற வாறு விவசாயிகள் தங்கள் நிலங்களை எவ்வாறு மேம்படுத்துதல், மழைநீரை சேமிப்பு, புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நீர் நிலங்களை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மத்திய மாநில அரசின் விவசாயம் – கால்நடை சுகாதாரம் கலாச்சாரம் – வாழ்வியல் முறை கல்வி நீர் மற்றும் கழிவு நீர் போன்ற திட்டங்களை. பருவகால மாற்றத்தின் போது . எவ்வாறு சீர் செய்து குறித்து விவாதிக்கப் பட்டது.
நிகழ்ச்சியில், கொரக்பூர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் சிராஜ் வஜ்ஜி, நிவேதிதா, ஸ்ரீவத்தவா மிஷன் சம்ரிதி நிறுவனத்தை சேர்ந்த ராம் சந்திர ராவ்டாபு ரேமண்ட் ஆரோக்கிய சாமி, சுப்ரா ஜா, பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
மேலும், யுனிசெவ் நிறுவன பிரதிநிதி வேளாண்மை துறை துணை இயக்குனர். நாச்சியார் விற்பனை சந்தைபடுத்து தல் துறை துணை இயக்குநர் ரமேஷ், வேளாண் ஆராய்ச்சி மைய பேராசிரியர் செல்வி ரமேஷ், உட்பட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
பயிற்சி பட்டறையில், முன்னோடி விவசாயிகள், அரசு சாரா தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மகளிர் குழுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பிரதிநிகள் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை, திட்ட அலுவலர் சிவக்கு குமார் செய்திருந்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி