மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் , (17.2.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மாசௌ.சங்கீதா, மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ,
மதுரை அரசு விளையாட்டு விடுதியை சார்ந்த மாணவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ராஜா அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி