திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் மீஞ்சூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பேசிய ஆர் எஸ் பாரதி வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சித் தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு 236 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் கேட்டுக்கொண்டார். பின்னர் பேசிய அமைச்சர் நாசர் தளபதி அவர்கள் எப்படி இரவும் பகலும் ஓழாமல் உழைத்து இந்தியாவிற்கே முன் உதாரணமாக திகழ்கிறாரோ அதே போன்று கட்சித் தொண்டர்கள் இரவு பகல் இன்று பாராமல் உழைத்து தளபதி அவர்களை மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என கட்சி தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் டி ஜே கோவிந்தராஜன், மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றியம் நகரம் பேரூர் ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு