விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் நலத்துறை சார்பில், சர்வதேச மகளிர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் காரியாபட்டியில் நடந்தது. காரியாபட்டியில், சர்வதேச மகளிர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் நலத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் சேது பொறியியல் கல்லூரியில் நடை பெற்றது. கல்லூரி நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்,
சர்வதேச பெண்கள் தின விழிப்புணர்வு பற்றி நடந்த கருத்தரங்கில் திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றினார். மேலும் , பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டம் 200, மற்றும் கல்வி முன்னேற்றம் குறித்த குறும்படங்கள் காண்பிக்கப்பட்டது.
பாண்டியன் குழுவினர் தயாரித்த லட்சத்தில் ஒரு கதை என்ற தலைப்பில் வெளியிட்ட குறும்படம் முதலிடத்தையும் பாண்டியராஜன் குழுவினர் , பெண்மை என்ற தலைப்பில் தயாரித்த குரும்படத்திற்கு 2ம் இடத்தை யும் மதன்குமார் , மாதரே என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட குறும்படத்திற்கு 5-வது இடத்தை பெற்றன. குறும்பட தயாரிப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பொண்ணு லட்சுமி .
சேது பொறியியல் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன் சீனி முகமது அலியார் மறைக்காயர் நிலாபர் பாத்திமா நாசியா பாத்திமா காரியாபட்டி வட்டாட்சியர் மாரீஸ்வரன் கலந்து கொண்டனர். நிகழ்வினை, சேது பொறியியல் கல்லூரி தேர்வு துறை தலைவர் முரளி கண்ணன் பேராசிரியர்கள் சிவபாரதி லட்மண ராஜ் கார்த்திக் குமார் மகளிர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் ஜெய சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி