மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையம் முன்பு, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய், தொகுதி மகளிரணி தலைவர் ஆனந்தி தலைமையிலான நிர்வாகிகள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி