செங்கல்பட்டு: செங்கை நகரின் இன்றைய அடையாளங்களான அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, அரசு கல்லூரி சட்டக் கல்லூரி, விரைவில் வர இருக்கும் புதிய பேருந்து நிலையம், மணிகுண்டு, நகராட்சி கட்டிடம் இன்னும் பல கொடைகளை மனமுவந்து வழங்கிய கொடைவள்ளல் ராப்பகதூர் வேதாச்சலம் ஐயா அவர்களின் 129 வது பிறந்தத நாள் விழாவை இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பினர் அவ்வமைப்பின் தலைவர் லக்ஷ்மி நம்பியார் தலைமையில், மருத்துவமனை வளாகத்திற்குள்ளும், இயற்கை யோகா மருத்துவ வளாகத்திற்குள்ளும், மற்றும் இராஜேஸ்வரி வேதாசலம் கலைக் கல்லூரியின் வளாகத்திற்குள்ளும் அவர்களின் திருவுருவ சிலைக்கும் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
இதில் முதலாவதாக செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை முதல்வர் .G. சிவசங்கரன் அவர்கள் தலைமையில் மருத்துவ கண்காணிப்பாளர் .ஜோதி குமார் முன்னிலையில் துறை தலைவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் தலைவர் லட்சுமி நம்பியார், செயலாளர் அ. பாஸ்கரன், வணிகர் சங்க தலைவர் உத்தரகுமார் மற்றும் அலும்னி சங்க பொறுப்பாளர்களின் முன்னிலையில் அவர்களின் திருஉருவ படத்திற்கு கல்லூரி முதல்வர் மற்றும் அலும்னி ஆலோசகர் லயன். J. ஜான்சன் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து ஐயாவை பற்றி புகழஞ்சலி செலுத்தினார்கள்.
அடுத்து சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிறுவனம் மற்றும் செங்கல்பட்டில் மிகப் புகழ்பெற்ற PREPARE என்ற தொண்டு நிறுவனம் மற்றும் எங்களது முன்னாள் மாணவர் சங்கம் ஆகியோர் இணைந்து சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம முதியவர்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றை PREPARE தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
அதற்கு முன்பு நடத்தப்பட்ட அய்யா பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆலோசகர் லயன். J. ஜான்சன் அவர்கள் கொடை வல்லளின் தீவிர செயல்பாடுகளையும், சாதனைகளையும், அவர் செங்கல்பட்டு நகருக்கு அருளிய கொடை விபரங்களையும்,பல வரலாற்று நிகழ்வுகளையும் தெள்ளத் தெளிவாக விளக்கி சிறப்புரையாற்றினார். பின்னர் PREPARE தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் J.D.R அவர்கள் ஐயாவின் சாதனைகளையும் பற்றியும் மருத்துவ சிகிச்சை முகாம் மிகச் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் மையத்தின் RMO பிரபு மற்றும் HOD பாண்டியராஜ், மருத்துவர்கள், அலும்னி பொறுப்பாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆகியோர் உடனிருந்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்து மிகச் சிறப்பாக நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டார்கள். இறுதியாக, எமது இராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலை கல்லூரி வளாகத்திற்குள் எங்களது சங்கத்தின் தலைவர் லட்சுமி நம்பியார் தலைமையில், அ.பாஸ்கரன் செயலாளர், அவர்களின் முன்னிலையில், எம் .அசோக்குமார் பொருளாளர் அவர்களின் வாழ்த்துறையில் எமது கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர்.பா.கி கிள்ளிவளவன், பேராசிரியர்கள் முனைவர். ராஜரத்தினம், முனைவர் ஷுன்முக சுந்தரம், அலுவலக பணியாளர்கள் மற்றும் எமது அலும்னி பொறுப்பாளர்களாகிய, V.ஹரிதாஸ், S.துரைராஜ், மனோகரன், T. J. ரவி .கிருஷ்ணமூர்த்தி, கண்ணப்பன் மணி,சிவகுமார் மற்றும் பால் ராஜ் அவர்களின் முன்னிலையில் மிகச் சிறப்பாக இராஜேஸ்வரி வேதாசலம் அவர்கள் இணைந்துள்ள திரு உருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்து கொடைவள்ளல் வேதாசலம் அவர்களின் புகழை பற்றி வீர உரை ஆற்றினோம். இறுதியாக V.ஜெயலட்சுமி நன்றி உரை கூற விழாவானது இனிதே முடிவற்றது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்