விருதுநகர் : விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க மற்றும் காரியாபட்டி சித்தனேந்தல் பால்ச்சாமித் தேவர் குடும்பத்தினர் சார்பாக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் – வீல்சேர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கழக அவைத்தலைவர் ஜெயபெருமாள் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் , வீல்சேர்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.சிவசாமி, பொதுக்குழு உறுப்பினர் பழனி, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், தோப்பூர் முருகன், திருச்சுழி முனியாண்டி, முத்துராம லிங்கம் பஞ்சாயத்து தலைவர்கள் சுப்பிரமணியம், ஆதி ஈஸ்வரன் வேங்கைமார்பன், சண்முகம், குண்டு மலை, சித்தனேந்தல் ராஜேந்திரன், வெள்ளைச்சாமி, ஓடாத்தூர் முத்துராம லிங்கம், எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி