சிவகங்கை : சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்பட உள்ள GROUP1 மற்றும் GROUP || போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் (14.07.2023), அன்று முதல் சிவகங்கை ஆட்சியரக மயில்கேட் அருகில் உள்ள சிவகங்கை படிப்பு வட்டத்தில். மாவட்ட காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை பெறவுள்ளது. இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் bit.ly/tmpscclass என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04575 245225 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ இந்த இலவசப் பயிற்சி வகுப்பிற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இனளஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் நூலகத்தையும் பயன்படுத்தி போட்டித் தேர்விற்கு தங்களை தயார் செய்து கொண்டு பயன்பெறலாம். போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்து வருகின்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது பெயரினை கட்டணமில்லாமல் இலவசமாக பதிவு செய்து கொண்டு இவ்விணையதளத்தில் ஒன்றிய/மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வகளுக்கான பாடக்குறிப்புகள் வினாவிடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆஷா அஜித்.இ.ஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி