சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி 26 ,28 வது வார்டில் குடிநீர் விநியோகம் மிகக் குறைந்த அளவில் வருவதாக அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அந்த வார்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வணக்கத்திற்குரிய நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை அவர்கள் ,இன்று அந்த வார்டில் வீடு தோறும் ஆய்வு செய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள். இன்று ஆய்வு செய்த நகராட்சி ஊழியர்கள் சில வீடுகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவதை கண்டறிந்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மேலும் அனைத்து வீடுகளிலும் ஆய்வு செய்வதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி