திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கத்தின் சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கிறிஸ்துவ வாலிப சங்கத்தின் தலைவர் ஜெ.குருசாலமோன் தலைமை வகித்தார், வாலிபர் சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், டேவிட் அர்ஜுனன், தனசேகரன், ஈஸ்டர்ராஜ், அருள்தாமஸ், எம்.தாமஸ், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ஆபிரகாம் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் பெஞ்சமின்,பேராயர் விமல்ராஜ், உள்ளிட்டவர்கள் அனைவரையும் வரவேற்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மீஞ்சூர் தி.மு.க நகர செயலாளர் தமிழ்உதயன், பேரூராட்சித் துணைத் தலைவர் அலெக்சாண்டர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கிவைத்து புயல் மழையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பிக்க அனைவருக்கும் சமத்துவ நிகழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடியும் அனைவருக்கும் அருஞ்சுவை உணவளித்தனர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் துணைத் தலைவர் சுபாஷ், துணைச் செயலாளர் ஆண்ட்ரூஸ், ஜான் இமானுவேல், உள்ளிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு