சென்னை : சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ஆம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை முன்பதிவு (29.04.2024) முதல் தொடங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான சென்னை மாவட்டத்தில் செயல்படும் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ஆம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை முன்பதிவு (29.04.2024) முதல் தொடங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே. இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான சென்னை மாவட்டத்தில் செயல்படும் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ஆம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை முன்பதிவு (29.04.2024) முதல் தொடங்கப்பட உள்ளது.செப்டம்பரில் தொடங்கும் இந்தப் பயிற்சி நடைபெறும் காலம் ஓராண்டு ஆகும். இரண்டு பருவமுறைகளில் பயிற்சி நடைபெறும் பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். விண்ணப்பிப்பதற்கான தேதி. பயிற்சி கட்டண விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்களை www.tnculcm.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தினை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி