சென்னை : சென்னை எழும்பூரில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் சர்வதேச விமான கல்லூரியை அமிர்தா குழுமத்தின் தலைவர் பூமிநாதன் அவர்கள் விஞ்ஞானி மற்றும் கல்வியாளருமான டாக்டர் இ கே சிவகுமார் அவர்கள் இணைந்து திறந்து வைத்தார். அண்ணா பல்கலைக்கழக விஞ்ஞானியும், பேராசிரியருமான இ.கே.டி.சிவக்குமார் சிறப்பு அழைப்பாளர் ஆக கலந்து கொண்டு தலைமை தாங்கினார். உடன் தலைமை நிர்வாக அதிகாரி கவிதா நந்தகுமார், தலைமை கல்வி இயக்குனர் லியோ பிரசாத் டீன் மில்டன் பல்கலைக் கழகத் தலைவர் பானுமதி ஆகியோர் உள்ளனர். சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர். பூமிநாதன் கூறுகையில், “ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வித் துறையில் இந்தியாவிலேயே சென்னைஸ் அமிர்தா தான் ஒரு முன்னோடி, வேலை சார்ந்த படிப்புகளை வழங் குவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.
இந்தியா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் விமானத் துறை சார்ந்தும், விமானத் திறன்களுக்கான தேவையும் வேகமாக அதிகரித்து வருவதால் இந்தத் துறை கணிசமான வளர்ச்சிக்கு தயாராக உள்ளது. ” மேலும் விவரங்களுக்கு 9363300400 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றார். மேலும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவீதம் வேலைக்கான உதவி சென்னைஸ் அமிர்தா கல்லூரி வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி