சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர் பற்றாக் குறையைப் போக்க விரைவில் 5,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, நகராட்சிகளில் நியமனம் செய்யப்படவுள்ளார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது “நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ,1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 2.05 லட்சம் பேருக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
வீட்டில் இருந்தே வேலை’’. அலுவலகம் செல்ல தேவையில்லை. அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம் சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத்திட்டம் ரூ,10 ஆயிரத்து 890 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. சென்னை தவிர 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் 11 ஆயிரத்து 872 கி.மீ. நீளமுள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டு, 4 ஆண்டுகளில் பணியை முடிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேக்கத்திடக்கழிவுகளை அகற்றி அந்த நிலங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரங்களை நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டது. 41 உள்ளாட்சி அமைப்புகளில் மீட்கப்பட்ட நிலங்களில் இதுவரை 56 ஆயிரத்து 958 மரங்கள் நடப்பட்டு உள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி