திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில், 306 கிராமப்புற ஊராட்சி பகுதிகளில் (11.07.2024) முதல் (23.08.2024) வரை 23 நாட்கள் 68 முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டு, (11.07.2024) முதல் ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
அதன்படி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், எ.வெள்ளோடு ஊராட்சியில் வி.எம்.கே கல்யாண மண்டபம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், காந்தி கிராமம் ஊராட்சியில் தம்பிதோட்டம் மேல்நிலைப்பள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வில்வாதம்பட்டி ஊராட்சியில் தொப்பம்பட்டி வேலு மஹால் ஆகிய இடங்களில் ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா