செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்குமேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரிர் சாந்தி அவர்கள் பள்ளி மேலாண்மை குழு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்து விளக்கம் அளித்தார். இதில் பள்ளியின் மேம்பாட்டிற்காக தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக பெற்றோர்கள் மேடைக்கு வந்து ஆர்வமுடன் கூறியது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிகழ்ச்சியை ஆசிரியை கீதாகுமாரி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்