திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் மரியன் கணித மன்றம் சிறப்பாக இயங்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (9/8/2024) – பிற்பகல் 3:00 மணி அளவில், தீனச்சந்திரன் அரங்கத்தில், மரியன் கணித மன்ற தொடக்க விழா நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் தாளாளர் தந்தை அருட்பணி. மரியநாதன்.சேசு சபை ஆசியுரை வழங்கினார். தலைமையாசிரியர் அருட்பணி. ஆரோக்கியதாஸ் சேசு சபை வாழ்த்துரை வழங்கினார். அருட்பணி.ஜோசப் சேவியர் உள்ளிட்ட கூடுதல் உதவித் தலைமை ஆசிரியர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் தாளாளர். தந்தை பொன் துகில் அணிவித்தார். தலைமை ஆசிரியர் தந்தை நினைவு பரிசை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர்.சேவியர் ஜெரால்டு புனிதன் கணிதத்தில்(AI) செயற்கை நுண்ணறிவின் பங்கு என்ற தலைப்பில்-கருத்தரங்கம் நடத்தினார். இவர் பள்ளியின் இவர் சிறந்த இந்திய கணித மேதைகளாக மாற மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். Linear algebra,Calculus, probability ஒன்றாக கணித தலைப்புகளை படிப்பதன் மூலம் உயர்ந்த பதவியில், அதிக வருமானத்துடன் பணியில் சேரலாம். இந்த ஆண்டும் திண்டுக்கல் மாவட்ட அளவில் கணித வினாடி வினா போட்டி நடத்தப்படும் அதில் மூன்று பிரிவுகளில் நடத்தி பரிசுகள் வழங்குவது பற்றி கூறினார்.
இவர் தந்தை பள்ளியில் பணியாற்றிய ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் என்பதாலும் திண்டுக்கல் மாவட்டத்தை Maths Hub ஆக மாற்றுவது என்றும், கணிதம் பற்றி அடிப்படை விழிப்புணர்வு வேண்டும் என்றும் கூறினார். பள்ளியில் உள்ள கணித மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்று சிறப்பாக பயனடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து கணித ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மன்றங்களின் இயக்குனர் தந்தை அருட்பணி. தெரஸ் நாதன் சேசு சபை கணித மன்றத்தில், இவ்வாண்டிற்கான மாணவர் தலைவர். செல்வன். அங்கமுத்து 11-B மற்றும் மாணவர் செயலர் செல்வன்.மௌலித் ஆகியோருக்கு உறுதிமொழி ஏற்க செய்து, பதவியேற்பு செய்து வைத்தார். கணித மன்ற தலைவர். மரிய ராஜேந்திரன். சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். செயலாளர்.கிறிஸ்டோபர். பொருளர்.செலாஸ்டின். ஆகியோரும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி கணித மன்ற ஆசிரியர்களும் நிகழ்ச்சிகளை சிறப்பாக வழி நடத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா