திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடையில் பழமை வாய்ந்த அருள்மிகு திரவுபதி அம்மன் சமேத ஸ்ரீ தர்மராஜா திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதையடுத்து யாக குண்டத்தில் பூர்ணாஹதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ கோபுர கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை ஊற்றி சிவாச்சார்யார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷமிட்டு அம்மனை வணங்கினர். இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திரவுபதி அம்மனையும் தர்மராஜாவையும் தரிசித்து சென்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு