திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகாவில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இ சேவா-கேந்திரா மையத்தை மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி.முத்துசாரதா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி, முதன்மை சார்பு நீதிபதி, கூடுதல் சார்பு நீதிபதி, உரிமையியல் நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நீதிபதி, அரசு வழக்கறிஞர்கள், பழனி, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், இதர அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த இ சேவா கேந்திரா மூலம் வழக்கறிஞர்கள், காவல்துறை, இதர அரசுத்துறை சார்ந்தோர் மற்றும் பொதுமக்கள் எளிதாக வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், பொதுமக்கள் எளிய முறையில் வழக்கின் நிலை, வாய்தா விபரம், வழக்கு சம்பந்தப்பட்ட இதர விபரங்களை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா