மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், வருவாய்துறை மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சால் புயல் வெள்ளசேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், அரிசி மூடை, பருப்பு மூடை, போர்வை, துண்டு, கைலி,பாய், பிஸ்கட் பாக்கெட் பெட்டிகள், கேக், குடிநீர் குடுவைகள் உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 830 மதிப்புள்ள பொருள்கள் வாடிப்பட்டி தாலுகா சார்பாக வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலரிடம் இருந்து பெறப்பட்டது. உடன் தலைமை
யிடத்து துணை தாசில்தார் கோமதி, மண்டலதுணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் ராமர், ராஜா, மற்றும் அலுவலக பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் இருந்து மினிலாரியில் அனுப்பி வைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி