செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அடுத்த ஒட்டேரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் . மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் மற்றும்.தொ.க), ம. வட்டார கல்வி அலுவலர் . காஞ்சனா , ஆகியோர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓட்டேரி விரிவில் உள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இறைவழிபாட்டு கூட்டம் மற்றும் வகுப்பறை செயல்பாடுகளை . பார்வையிட்டனர். இதில் சிறப்பாக செய்த மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளியின் SMC தலைவர், மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்