மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8ஆம் ஆண்டு நினைவு தினம் கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கி மௌன அஞ்சலி செலுத்தினார். பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன், எம்ஜிஆர் மன்ற பேரூர் செயலாளர் முத்து கண்ணன்,ஒன்றிய அவைத் தலைவர் ஆர்.எஸ்.ராமசாமி, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூர் துணைச் செயலாளர் சந்தனதுரை வரவேற்றார். இதில் பேரவை மாநில துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் கவுன்சிலர்கள் சங்கு, திருப்பதி, நிர்வாகிகள் கோட்டையன், வில்லி,அரிசி கடை ரங்கராஜ்,ராஜேந்திரன், ரங்கராஜ்,, மோகன்,பாலகிருஷ்ணன், பாண்டி,
மகளிர் அணிசெயலாளர் ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேல்முருகன் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி