திருவள்ளூர்: சட்ட மாமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புரட்சி பாரத கட்சியின் மீஞ்சூர் நகர தலைவரும் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளர் நல சங்க தலைவருமான என். சுரேஷ் தலைமையில் மீஞ்சூரில் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து சோழவரம் ஒன்றியம் திருநிலை ஊராட்சியில் அமைந்துள்ள அன்பகம் முதியோர் காப்பகத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பி.எஸ். சங்கர் கலந்து கொண்டு அறுசுவை உணவு உடன் புரட்சி பாரத கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வல்லூர் பி. சங்கர், மீஞ்சூர் என். சரவணன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் வல்லூா செல்வகுமார், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் வெள்ளி வாய் சாவடி குமார், மீஞ்சூர் யோகேஸ்வரன் புஷ்பராஜ் ஜெகன் மகேந்திரன் ஆறு என்ற ஆறுமுகம்
மற்றும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் தூய்மை பணியாளர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு