விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பில்,
உலக மண் தின விழா நடைபெற்றது. காரியாபட்டி கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள புற்றுக்
கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் சுவாமி லட்சுமணன் தலைமை வகித்தார். கிரீன் பவுண்டேஷன் நிர்வாகி பொன்ராம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் குருசாமி ஆறுமுகம் மற்றும் கோயில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி