திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கோரை குப்பம் பகுதியில் ரப்பர் பந்து கிரிக்கெட் போட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட பல்வேறு அணிகள் பங்கேற்ற நிலையில் கிரிக்கெட் போட்டியை மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசாக வெற்றிகோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கி வெற்றி பெற்ற அணி வீரர்களை பாராட்டி சிறப்பித்தார். இந்நிகழ்வில் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார் ஒன்றிய கவுன்சிலர்கள் சுமத்திரா குமார் செவ்வழகி எர்ணாவூரான் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள்
வழக்கறிஞர் மாரி தமிழ்ச்செல்வன் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு